திருக்காட்டுப்பள்ளி, டிச.28: செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டியில் 600 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் போலீசார் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சாவை நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கும் பணியில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அடுத்த அயோத்திபட்டியில் உள்ள மருத்துவ கழிவுகள் அழிக்கும் தொழிற்சாலையில் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாஉல் ஹக், ஏடிஎஸ்பி குமார்,
ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. சானாஸ், டிஎஸ்பி., கள் அருள்மொழி அரசு, திவ்யா, அண்ணாதுரை, மயிலாடுதுறை ராஜேந்திரன், திருவாரூர், பவானி முன்னிலையில் போலீசார் அழித்தனர். இது குறித்து டி.ஐ.ஜி., கூறுகையில், நான்கு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்பப்பட்டு வருவதாகவும், இதற்காக உள்ள செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி தெரியப்படுத்தும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
The post தஞ்சை சரகத்தில் பறிமுதல் செய்த 600 கிலோ கஞ்சா அழிப்பு appeared first on Dinakaran.