×

திருக்கார்த்திகை விளக்குகள் எங்கெங்கு ஏற்ற வேண்டும்!

கார்த்திகை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள்தான் திருக்கார்த்திகை. அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். வீட்டில் ஏற்றப்படும் தீபங்களை எங்கெல்லாம் ஏற்ற வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.

* முதல் நான்கு தீபங்களை வீட்டின் முற்றம் பகுதியில் ஏற்ற வேண்டும். முற்றம் இல்லாத வீடுகளில் வரவேற்பறையில் ஏற்றலாம்.

*சமையல் அறையில் ஈசானி மூலையில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும்.

* வீட்டில் உள்ள அறைகளில் வாசலில் இருபுறம் ஒரு விளக்கு என இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்.

* வீட்டின் பின்கட்டுப் பகுதியிலும் நான்கு விளக்குகள் ஏற்ற வேண்டும்.

* திண்ணைப் பகுதியில் நான்கு தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்.

* மாடங்கள் கொண்ட வீடு என்றால் அங்கு இரண்டு புறமும் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் வாசல் பகுதியில் ஏற்றலாம்.

* வீட்டு வாயிலின் நிலைப்படியில் இரண்டு புறமும் விளக்குகள் வைக்கலாம்.

* பூஜை அறையிலும் இரண்டு விளக்குகள் ஏற்றலாம்.

* வீட்டுக்கு வெளியே ஒரு தீபமும் கோலத்தின் மேல் ஐந்து விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும்.

கார்த்திகை தீபங்களை ஏற்றும் போது தீபலட்சுமியே, ஜோதித் திருவே! உன்னை மனமார வணங்குகிறேன். எல்லாப் பாவங்களையும் நீ அழிக்கக்கூடியவள். என் பாவங்கள் அழிந்து பிறவா நிலை பெற்று நித்யானந்தத்தில் சேர எனக்கு அருள் புரிவாயாக என்று பொருள்படும் பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷ
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா விப்ரா!

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

The post திருக்கார்த்திகை விளக்குகள் எங்கெங்கு ஏற்ற வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Karthigai ,Pelarnami ,Dinakaran ,
× RELATED கார்த்திகை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…