கௌசிகீயின் கண்கள் சிவந்தன. அசுரப் படையின் ஒரு பகுதியைதம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணமானவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர
உருவோடு காளி வெளிப்பட்டாள்.
தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையோடு கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பதுபோல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தணல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.
கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். ‘தூம்ரம்’ என்றால் ‘புகை’ என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான்.
தூம்ரலோசனனை தன்னுடைய மாத்ருகா கணங்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா, நாரசிம்ஹி என்று சொல்லக் கூடிய அஷ்ட மாத்ருகைகளை மூலமாக தூம்ரலோசனனை சம்ஹாரம் செய்கிறாள்.
இதற்குப் பிறகு ரக்த பீஜன் என்கிற அசுரன் வருகிறான். அவனுடைய ரத்தமானது ஒரு துளி எங்கேயாவது சிந்திவிட்டால் அதிலிருந்து இன்னொரு ரக்த பீஜன் வருவான். அப்போது எத்தனை ரத்தத்துளி பூமியில் சிந்துகிறதோ அத்தனை அசுரர்கள் வருவார்கள். அம்பிகையானவள் காளியிடம் அவனின் ரத்தம் ஒரு துளி கூட கீழே சிந்தாமல் நீயே அனைத்தையும் விழுங்கிவிடு என்றாள். காளியானவள் அப்படியே விழுங்கி விடுகின்றாள்.
தூம்ரலோசனன், மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப – நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும்
எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர்.
மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு’ என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான். கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.
எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும் – நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே… ‘பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்’ எனப் போர்க்களம் ஓடினர்.
ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசிகீயிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகா யுத்தம் தொடங்கியது. பல படைக்கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன் அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள். ஒட்டு மொத்த படைக்கலன்களையும் சிம்மமும், சாமுண்டியும் சம்கரிக்க சும்ப – நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள்.
தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை தஞ்சாவூரில் உள்ள கரந்தைக்கு அருகேயுள்ள பூமால் ராவுத்தன் தெருவில் உள்ள நிசும்பசூதனியின் கோயிலில் உள்ள மூல ஸ்தான சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள், சோழர்கள். நிசும்பசூதனி போர்க்களத்தில் எப்படி இருப்பாளோ அப்படியே மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவளே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்தகளத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப்புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின்
சிகரம் தொட்டிருக்கிறார்கள்.
அம்பிகைக்கு சும்ப த்வம்ஸினி என்கிற பெயர் வருகிறது. நிசும்பனை சம்ஹாரம் செய்ததால் நிசும்ப சூதனி என்று பெயர் வந்தது. இப்போது நாம் கொஞ்சம் தத்துவ ரீதியாக உள்ளே செல்வோம் வாருங்கள். தேவிமகாத்மியத்தில் முதல் சரித்திரத்தில் அம்பிகை மது கைடபர்களை நேரடியாக வதம் செய்யவில்லை. விஷ்ணு மூலமாக மது கைடபர்களை வதம் செய்கிறாள். மகாலட்சுமியாக வரும்போது மகிஷாசுரனுடைய சைன்னியத்தை வதம் செய்கிறாள். ஆனால், நாம் மிகவும் சாத்வீகம் என்று சொல்லக்கூடிய சத்துவப் பிரதானமாக இருக்கக்கூடிய மகாசரஸ்வதி வரும்போதுதான் அத்தனை அசுரர்களையும் அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள். எப்படி என்பதை மேலே பார்த்தோம்.
இதில் ஏதோ ஒரு அந்தர்முகமாக உள்ளர்த்தம் இருக்க வேண்டும். கௌரியினுடைய கோசத்திலிருந்து உடலிலிருந்து வெளிப்பட்டதால் அவளுக்கு கௌசீகி என்று பெயர். இப்போது என்ன காண்பித்துக் கொடுக்கப்படுகிறது.
நாம் ஏதேனும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த limited knowledgeல் தொடங்கி, ultimate ஆக இதற்கு மேல் தெரிந்து கொள்ள ஏதுமில்லை என்கிற ஞானம் வரையிலும் இருக்கக் கூடிய எல்லாமே சரஸ்வதியினுடைய சொரூபம்தான். எங்கெல்லாம் நம்முடைய அறியாமை நீங்குகிறதோ அங்கெல்லாம் சரஸ்வதி இருக்கிறாள்.
இது சாதாரண lkg யிலிருந்து ஞானம் வரையிலும், ஆத்ம சாட்சாத்காரம் வரையிலும் சரஸ்வதியே இருக்கிறாள். மேலான தூய்மையின் வடிவாக, உயர்ந்த ஞானம் வரையிலும் விரவி நிற்கிறாள்.
The post சரஸ்வதியின் மகத்துவம் appeared first on Dinakaran.