×

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தற்போது அது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. நேற்று காலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் சென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Centre ,Tamil Nadu ,Southeast Bank Sea ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் நிலவும் குறைந்த...