- பாகிஸ்தானிய கடற்படை
- வெளியுறவு அமைச்சர்
- முதல் அமைச்சர்
- தில்லி
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. டு
- ஸ்டாலின்
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- பாகிஸ்தான் கடற்பட
- தின மலர்
டெல்லி: பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர் பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3-1-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-11-2024 அன்று எழுதியிருந்த கடிதத்தைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 6-12-2024 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களது ‘ஸ்ரீ வ்ராஜ் பூமி’ (பதிவு எண்.IND-GJ-25-MM-3458) மற்றும் ‘மந்தீப்’ (பதிவு எண்.IND- GJ-25-MM-1582) பெயர் கொண்ட படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் 3-1-2024 அன்று சிறைபிடித்ததை அறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றுள்ளதாகவும், மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும், மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய தூதரகம் இதைத் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: முதலமைச்சருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.