சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கு மேல் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, குமரி மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
டிச.16-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர்.16-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறையும் -பாலச்சந்திரன்
அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுகுறையும்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலு குறைந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறு 15 செ.மீ., வேளாங்கண்ணி 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 72 இடங்களில் கனமழை பதிவு
தமிழ்நாட்டில் 72 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட 4 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
45 கி.மீ. வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை
45 கி.மீ. வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும் என்பவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பைவிட 16% அதிக மழை பெய்துள்ளது
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தற்போது வரை இயல்பைவிட 16% அதிக மழை பெய்துள்ளது.
நெற்குன்றத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது
நெற்குன்றத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 8 செ.மீ., அண்ணா பல்கலை. 7 செ.மீ., கோடம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காரணமாக பனி பொழிவு போல் இருக்கும்; ஆனால் மழை பெய்ததும் அது மறைந்துவிடும்.
15-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
15-ம் தேதியை ஒட்டி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என கணிக்க முடியும்.
வானிலையை துல்லியமாக கணிக்க முடியாதது ஏன்?
வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க இயலாது என பாலச்சந்திரன் தெரிவித்தார். இன்றைய சூழலில் புயல், மழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை. செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட கணிப்பு செய்யப்படுகிறது; அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க உதவாது. தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும் என்று பாலச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.
The post கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது: பாலச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.