×

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை சம்பா, தாளடி நெல் விவசாயிகள் அச்சம்

 

தஞ்சாவூர், டிச. 12: தஞ்சாவூர் நகர் பகுதியில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சை நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல், அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது.

இதில் ,சம்பா பயிர்கள் 100 நாட்களை கடந்து கதிர் வரும் நிலையில் உள்ளது இந்த மழை இந்த பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், மழை தொடர்ந்தால் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். கடந்த பெஞ்சல் புயலின் போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெய்த மழை சம்பா சாகுபடி பயிர்களுக்கு உதவிகரமாக இருந்தது. இருப்பினும் இளம் தாளடி பயிர்கள் மழையில் மூழ்கி சேதம் அடைந்தது. அதேபோல் தற்போது பல பகுதிகளில் தாளடி நாற்று நடும் பணிகள் நடந்து வருகிறது. மழைத் தொடர்ந்தால் இந்த இளம் தாளடி பயிர்களும் சேதம் அடையும் என விவசாயிகள் அச்சமைடந்துள்ளனர்.

The post தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை சம்பா, தாளடி நெல் விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Bay of Bengal ,Samba ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது