×

தேனியில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

தேனி, டிச. 12: தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தின்போது, கடைகளின் மீதான 18 சதவீத வரி விதிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை மாநில அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும், வணிக உரிமக் கட்டணம் உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், குப்பை வரி மாநில முழுவதும் ஒரே சீராக விதித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Federation of Merchants' Associations ,Federation of All Merchants' Associations of Tamil Nadu ,Bangla Mat ,Theni Nagar ,Association ,Dinakaran ,
× RELATED புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள்