×

பிஎஸ்என்எல் ஊழியர் போராட்டம்

 

விருதுநகர், டிச.12: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்தும், நலிந்து வரும் பிஎஸ்என்எல் சேவைகளை சீர்படுத்த வேண்டும், அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களையும் தனியார்மயம் ஆக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பிஎஸ்என்எல் மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில உதவி தலைவர் சமுத்திரகனி, வளர் மங்கை, குருசாமி, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

 

The post பிஎஸ்என்எல் ஊழியர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்