×

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, டிச.13: தேவகோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, டிசம்பர், 2024 இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Devakottai ,Collector ,Asha Ajith ,Devakottai Panchayat Union ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே...