×

தேனியை நனைத்த சாரல் மழை

 

தேனி, டிச. 13: தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் வரும் நீரைக் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளதை எடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று (12ம் தேதி) முதல் வருகிற 16-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இதன்படி நேற்று அதிகாலை முதல் தேனி நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

அதிகாலை தொடங்கிய மழையானது நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து விட்டுவிட்டு பெய்தது. இதன் காரணமாக தேனி நகரானது கொடைக்கானலை நினைவுபடுத்தும் வகையில் குளிர்ந்த சூழலை அடைந்தது. தேனி நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகள், தலைசுமை வியாபாரிகள், வாகனத்தில் சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.

The post தேனியை நனைத்த சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED தேனி நகரில் காலியிடத்தில் குப்பையில்...