கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் உதவி கேட்பதுபோல் நடித்து மருந்து கடையில் இருந்து 2 செல்போன்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (32) என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மருந்து கடையில் இரு பெண் ஊழியர்கள் இருந்தனர். அப்போது, காது மற்றும் வாய் பேச முடியாது எனக்கூறி 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். சான்றிதழ் ஒன்றை காண்பித்து பண உதவி கேட்டுள்ளார். இதில் பரிதாபம் கொண்ட இரு பெண் ஊழியர்களும், 10 ரூபாய் கொடுத்து அவரை வழி அனுப்பி வைத்தனர். அவர் சென்ற பின் ₹25 ஆயிரம் மதிப்புள்ள இருவரது செல் போன்களும் காணாமல் போனது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, உதவி கேட்டு வந்த நபர் செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மருந்துக் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post உதவி கேட்பதுபோல் நடித்து மருந்து கடையில் செல்போன் திருட்டு appeared first on Dinakaran.