×

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் வயர் திருட்டு

 

கந்தர்வகோட்டை,டிச.12: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மோட்டார் வயர்களை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், அரவம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இதுபோல் இந்த ஊராட்சியில் இரண்டு இடங்களில் இரண்டு மோட்டார் செட்டுகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் இந்த மோட்டார் செட்டில் இருந்து வரும் காப்பர் வயர்களை சுமார் 200 மீட்டர் அளவுள்ள ரூ.25 ஆயிரம் மதிப்பு மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றுள்ளனர். இது பற்றி அறிந்த அரவம்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post கந்தர்வகோட்டை அருகே மோட்டார் வயர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Gandharvakot ,Kandarvakottai ,Pudukottai district ,Gandharvakottai Union ,Aravambatti Panchayat ,Panchayat ,Gandharvakottai ,Dinakaran ,
× RELATED காட்டுநாவல் ஊராட்சியின் நவீன இயந்திரம் மூலம் புல் பூண்டு வெட்டும் பணி