×

மழையால் நீர்நிலைகள் நிரம்பியது நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

பாணாவரம் : பாணாவரம் பகுதியில் ஏரிகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால்‌ விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

அதன்படி, கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பல்வேறு ஏரிகளும், நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தது. இதனால் விவசாய பணிகளில் விவசாயிகள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர். பாணாவரம் பகுதியில் உள்ள கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, காட்டுப் பாக்கம், போளிப்பாக்கம், ஆயல், குண்ணத்தூர், பன்னியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகளும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் ஆழ்துளை கிணறு மற்றும் பம்ப்செட்டுகள் வைத்துள்ள விவசாயிகள் விவசாய பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தை உழுது, பண்படுத்தி, உரமிட்டு, நெல் நாற்றுகள் எடுத்தல், நடவு செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

The post மழையால் நீர்நிலைகள் நிரம்பியது நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Panavaram ,Tamil Nadu ,
× RELATED பாணாவரம் அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்