×

விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் எம்எல்ஏக்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் அறிவித்த ரூ.3 லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கினர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் என்ற வகையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் காலில் ஏற்பட்டுள்ளது. 6 பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்தனர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு தனியார் மருத்துவமனையில் எந்தெந்த வசதிகள் இருக்க வேண்டுமோ, அது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதி மீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

The post விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Ministers ,I. Periyasamy ,A. Chakrabarani ,I.P. Senthilkumar ,Gandhirajan ,Dindigul Government Medical College Hospital ,Chief Minister ,Dinakaran ,
× RELATED குடிநீரில் கழிவுநீர் கலப்பா..? 2 பேர்...