×

வடமாநில தொழிலாளி மர்ம சாவு

நெய்வேலி, டிச. 10: நெய்வேலி என்எல்சியில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் புதிய அனல் மின் நிலையத்தில் பிரபல தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் புதிய அனல் மின் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி ஒப்பந்த பணிகளை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருமூக் சிங் மகன் பல்ஜீந்தர் சிங்(46) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை மர்மமான முறையில் இவர் இறந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்த சக தொழிலாளர்கள் இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பத்தால் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் நேற்று புதிய அனல் மின் நிலையத்திற்கு பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

The post வடமாநில தொழிலாளி மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : North ,state ,Neyveli ,North State ,Neyveli NLC ,Dinakaran ,
× RELATED மொபட் மீது பள்ளி பஸ் மோதி தாய் கண்முன் அண்ணன், தங்கை பலி