×

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

சேலம், டிச.10: சேலம் நல்லாம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி செல்வி (50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பூபதி (30) என்பவருக்கும் இடையே நிலபிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 7ம் தேதியன்று செல்வியின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மா, கொய்யா, முருங்கை மரங்களை பூபதி வெட்டி சேதப்படுத்தியுள்ளார். இதனை செல்வி தட்டிக்கேட்ட போது, அவர்களுக்கு இடையே வாய் தகறாறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், செல்வியை பூபதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி இரும்பாலை போலீசில் செல்வி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பூபதியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sathasivam ,Salem Nallampatti Kattuvalal ,Bhupathi ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்