மன்னார்குடி, டிச. 10: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் மரவாடி தெருவை சேர்ந்தவர் சேரன் (22). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் இருந்து வீட்டுக்கு பைக்கில் வந்த போது ஆதிச்சபுரம் ஸ்டேட் பேங்க் அருகில் இரண்டு நபர்கள் மது போதையில் சாலையின் நடுவே நின்றதாக கூறப்படுகிறது. அப்போது சேரன், அண்ணன் கொஞ்சம் ஓரமா நில்லுங்க என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேரனை வழிமறித்து தகாத வார்த் தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த சேரன் கோட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்ஐ நிதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக கூறி நெம் மேலி தோப்புத் தெரு ராஜா (46), ஓவர்சேரி சன்னதி தெரு விவேக் (35) ஆகிய இருவரை கைது செய்தனர்.
The post கோட்டூர் அருகே நிதி நிறுவன ஊழியரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.