×

தஞ்சையில் வீரதீர செயல்புரிந்த 5 மாணவியருக்கு தலா 10 ஆயிரம் பரிசுகள் கலெக்டர் வழங்கினார்

 

தஞ்சாவூர், டிச. 10: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வீரதீர செயல்புரிந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளிள் வெற்றி பெற்றவர்களுக்கும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் வீரச் செயல் புரிந்த மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி, மாவட்டத்தில் வீர தீரச் செயல் புரிந்த 5 மாணவியருக்கு தலா ரூ.10,000 வீதம், ரூ.50,000 பரிசுத் தொகைக்கான காசோலைகளையும், உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் லதா, பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் வீரதீர செயல்புரிந்த 5 மாணவியருக்கு தலா 10 ஆயிரம் பரிசுகள் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Veeratheera ,World Literacy Day ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை