×

பாதுகாப்பு இல்லாத மாணவிகள் விடுதி

 

சாத்தூர், டிச.10:சாத்தூர் நென்மேனி சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியின் சுற்றுச்சுவர் அருகில் செல்லும் நென்மேனி சாலையின் தளம் உயர்ந்து விட்டதால் அதன் அருகில் இருக்கும் விடுதியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளது. எளிதில் மாணவிகள் விடுதிக்குள் வெளிநபர்கள் அத்துமீறி செல்லும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாணவிகள் பாதுகாப்புக்காக விடுதியின் சுற்று சுவரை உயர்த்தி பாதுகாப்பு முள்வேலிகள் பொருத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பாதுகாப்பு இல்லாத மாணவிகள் விடுதி appeared first on Dinakaran.

Tags : Chatur ,Government Adi Dravidar Girls Hostel ,Chatur Nenmeni Road ,Nenmeni Road ,Dinakaran ,
× RELATED சாத்தூர் டோல்கேட்டில் அடிப்படை...