- சிவகங்கை
- சத்யமூர்த்தி
- நெல்லிக்குப்பம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- செமியா கம்பெனி
- வேன் டிரைவர்
- சென்னை
- தின மலர்
சிவகங்கை,டிச.10:சிவகங்கையில் செங்கல் ஏற்றி வந்த லாரியும், மினி லோடு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(59). சென்னையில் உள்ள சேமியா கம்பெனி வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர், வாகனத்தில் லோடு ஏற்றிக்கொண்டு சிவகங்கை பைபாஸ் சாலை வழியாக மானாமதுரை நோக்கி சென்றுள்ளார். அப்போது மானாமதுரையில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு மதகுபட்டி நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது.
லாரியை மானாமதுரை அருகே மேலப்பசலையை சேர்ந்த ராஜாங்கம்(70) ஓட்டி வந்துள்ளார். லாரியில் செல்வி(40), கிருஷ்ணவேணி(32), பஞ்சு(38) ஆகிய 3 பேர் இருந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் மதுரை முக்கு பைபாஸ் சாலை அருகே வந்தபோது லாரியும்,வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி டிரைவர் ராஜாங்கம் மற்றும் லாரியில் இருந்த மூன்று பெண்கள் உள்பட 4 பேர் சிறு காயத்துடன் தப்பினர். வேன் ஓட்டுநர் சத்தியமூர்த்தி வேனுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி மீட்டனர். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post லாரி,வேன் மோதலில் 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.