×

ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி ரயில் மறியல்: தமிழக காவிரி விவசாய சங்கம் தகவல்

வேதாரண்யம்: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு மறுக்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, முதலாளிகளின் நிறுவனங்களுக்கு ரைட் ஆப் என்ற பெயரில் ரூ.24 லட்சம் கோடி வரை கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

விவசாய கடன்களை திரும்ப செலுத்த இயலாத விவசாயிகளின் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கைகளை அம்பானி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் விளைநிலங்கள், நீர்நிலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படுகிறது.

எனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 16ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நாகையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாய சங்க நாகை மாவட்ட செயலாளர் கமல்ராம் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி ரயில் மறியல்: தமிழக காவிரி விவசாய சங்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,Tamil Nadu Cauvery Farmers Association ,Vedaranyam ,Modi government ,
× RELATED மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில்...