×

வருவாய்த்துறையில் அனைத்து பணியிடங்களையும் கவுன்சிலிங் முறையில் நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 

விருதுநகர், டிச.9: விருதுநகரில் வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சையது அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் சையது அபுதாகிர் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மூலம் நேரடி நியமனம் செய்யப்படும் நேரடி நியமன உதவியாளர்களை, தகுதிகாண் துணை வட்டாட்சியர் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும். 4 ஆண்டுகள் பயிற்சி முடித்ததும் துணை வட்டாட்சியர் பதவி வழங்க வேண்டும்.

மக்கள் தொகை அதிகரிப்பால் எண்ணற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு குறுவட்டத்திற்கு ஒரு மண்டல துணை வட்டாட்சியர் நியமனம் செய்ய வேண்டும் களைக்கப்பட்ட பேரிடர் நிர்வாக பணியிடங்களை மீள வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். வருவாய்த்துறையில் அனைத்து பணியிடங்களையும் கவுன்சிலிங் முறையில் நிரப்ப வேண்டுமென்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

The post வருவாய்த்துறையில் அனைத்து பணியிடங்களையும் கவுன்சிலிங் முறையில் நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : State Executive Committee ,Virudhunagar ,Revenue Group 2 Direct Appointment Officers Association ,State ,President ,Syed Abu Thakir ,TNPSC Group 2 ,Dinakaran ,
× RELATED கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்