×

மூணாறு குடியிருப்பு பகுதியில் காட்டுயானை கூட்டம் உலா

மூணாறு: மூணாறு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் உலாவ வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலார், நல்லதண்ணி, லட்சுமி, தேவிகுளம் மற்றும் கன்னிமலை போன்ற எஸ்டேட் பகுதிகளில், தேயிலை தோட்டங்களில் முகாமிட்டிருக்கும் காட்டுயானை கூட்டத்தால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பழைய மூணாறு எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறையின் யானை தடுப்பு சிறப்பு பிரிவினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். மேலும் இந்த யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்து செயல்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மூணாறு குடியிருப்பு பகுதியில் காட்டுயானை கூட்டம் உலா appeared first on Dinakaran.

Tags : Sunaru ,MANARU ,MANARU ESTATE ,KERALA STATE ,MUNARU ,Kadalar ,Nallathani ,Lakshmi ,Devikulam ,Kannimalai ,
× RELATED மூணாறில் செயல்பட்டு வரும் தற்காலிக...