பட்டுக்கோட்டை, டிச. 8: பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நைனாங்குளம் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலுள்ள கழிவு நீர் அனைத்தும் நகராட்சிக்குட்பட்ட கரிக்காடு அண்ணாகுடியிருப்பு, வளவன்புரம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு அந்தோணியார் கோயில் தெரு, மாட்டுச்சந்தை ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், நாடியம்மன் கோயில் அருகில் ஆகிய 5 இடங்களில் ரூபாய் 5 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
33 வார்டுகளில் உள்ள கழிவுநீர் அனைத்தும் மேற்கண்ட 5 இடங்களில் அமைய உள்ள கழிவுநீர் செல்லும் குழாய் மூலம் நைனாங்குளம் பகுதியில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல உள்ளது. இதில் முதற்கட்டமாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் அருகில் கழிவு நீர் செல்லும் குழாய் பதிக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடந்தது. விழாவில் பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ், பொறியாளர் சித்ரா, நகராட்சி கவுன்சிலர்கள் ஜவஹர்பாபு, கலையரசி, ராமலிங்கம், காமராஜ், முத்துச்சாமி, சுரேஷ், சாந்திகுணசேகரன், லதா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post பட்டுக்கோட்டை நகராட்சியில் ₹16 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.