×

வைகுண்டம் அருகே பஸ் மோதி விவசாயி பலி

கேடிசி நகர், டிச.8: வைகுண்டம் அருகே இசவன்குளம், ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பேராச்சி (51). விவசாயி. இவர் அரசு பஸ்சில் வைகுண்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வைகுண்டத்திலிருந்து ஆழ்வார்கற்குளம் வழியாக நெல்லை செல்லும் பஸ்சில் ஏறி பத்மநாபமங்கலத்தில் இறங்கினார். பின்னர் பஸ் புறப்படுவதற்கு முன் ரோட்டை குறுக்காக கடந்த போது பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post வைகுண்டம் அருகே பஸ் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Vaikundam ,KDC Nagar ,Ram Koil Street, Isavankulam ,Vaikundam ,Alwarkarkulam ,Nellie ,Padmanapamangalam ,
× RELATED நீர் சேமிக்கும் திறன் குறைவதால்...