- ஏரல்
- ஏரியல்
- நாசரேத்
- ஆரல் தாமிரபரணி ஆறு
- ஜீவானந்தம்
- எப்ராயிம்
- வடக்கு கடையனோடை கோயில் தெரு
- பெங்களூர்
- ஏரல் ஆறு
- தின மலர்
ஏரல், டிச. 8: ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி நாசரேத் வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத் அருகேயுள்ள வடக்கு கடையனோடை கோயில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் எப்ராயீம் (28). வாலிபரான இவர் பெங்களூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்தார். பெற்றோரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்த இடத்தில் நேற்று முன்தினம் காலை பைக்கில் ஏரல் தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளார். ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திற்கு மேல்பக்கம் உள்ள தண்ணீரில் குளித்து கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து விரைந்துவந்த ஏரல் எஸ்.ஐக்கள் பழனிசாமி, தாமஸ்டேனியல் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன், எப்றாயீமின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகின்றார்.
The post ஏரல் ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.