×

வன காப்பாளர், வன காவலர் பதவி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: வனக் காப்பாளர், வனக்காவலர் பதவிக்கான தற்காலிக தேர்வர்கள் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 (குரூப் 4) தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பென் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த அக்டோபர் 28ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் இரண்டாவது பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை வருகிற 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை தேர்வாணைய தளத்தில் ஒரு முறைப் பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வன காப்பாளர், வன காவலர் பதவி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்காலிக தேர்வர்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Conservator ,Forest Guard ,Tamil Nadu Public Service Commission ,Gopala Sundararaj ,
× RELATED குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு...