மதுரை, டிச. 8: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய மகப்பேறு பிரிவு கட்டிடத்தில், கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மேற்கூரை சிமென்ட் ஸ்லாப் இடிந்து விழுந்தது. இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த மதுரை ஐகோர்ட் கிளை, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இதையடுத்து, மகப்பேறு பிரிவு கட்டிடத்தை திருச்சி ஐஐடி பொறியியல் துறையினர், மதுரை பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் மற்றும் டீன் அருள் சுந்தரேஸ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதன் பேரில் நேற்று திருச்சி ஐஐடி பொறியியல் பிரிவு துறைத்தலைவர் முத்துக்குமரன், உதவி பேராசிரியர்கள் சேவுகன் ராஜ்கண்ணு ஆகியோர் தலைமையிலான குழுவினர், மதுரை அரசு மருத்துவமனையின் பழைய மகப்பேறு பிரிவு கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது டீன் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மதுரை அரசு மருத்துவமனையில் ஐஐடி குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.