கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. தற்போது 16 அமைச்சர்கள் உள்ளனர். நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜவை சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
அதன்படி, திப்ரூகரில் இருந்து நான்கு முறை பேரவைக்கு தேர்ந்தெடுக்கபபட்ட பிரசாந்த புகன், பத்தர்கண்டியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணேன்டு பால், லக்கிபூர் பகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு முதல்முறை தேர்ந்தெடுக்கபபட்ட கவுசிக் ராய் மற்றும் டூம் டூமாவில் இருந்து முதல்முதலாக பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரூபேஷ் கோலா ஆகியோர் நேற்று பதவி ஏற்று கொண்டனர். கவுகாத்தியில் உள்ள ஜமந்தா சங்கர்தேவா சர்வதேச அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அசாம் அமைச்சரவையின் எண்ணிக்கை முதல்வர் சர்மாவுடன் சேர்த்து 20ஆக உயர்ந்து உள்ளது.
The post 4 புதிய அமைச்சர்கள் அசாமில் பதவி ஏற்பு appeared first on Dinakaran.