×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

சென்னை: திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் இன்றுநடைபெற உள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: திமுக தலைமை செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுகவின் ஆக்க பணிகள் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : DMK ,Executive Committee ,Anna Arivalayam ,Chennai ,Chief Minister ,MK Stalin ,DMK Executive Committee ,General Secretary ,Durai Murugan ,Chennai, Kalaignar… ,Executive ,Committee ,Dinakaran ,
× RELATED திமுக தலைவரும் முதலமைச்சருமான...