×

சென்னையில் இன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டம்: தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில நிர்வாகிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் சென்னையில் நடக்கிறது.

கூட்டத்தில் திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகள், உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். விழாவை சிறப்பான முறையில் நடத்துவது குறித்தும், சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்துவது குறித்தும் மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும். எனவே கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னையில் இன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டம்: தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Sports ,Development ,Chennai ,Dayanidhi Maran ,DMK ,Sports Development Team ,DMK Sports Development Team ,DMK Parliamentary Party ,Vice President ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி