×

அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீச்சில் காங்கிரஸ் தொண்டர் பலி: அசாமில் பரபரப்பு

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் மணிப்பூரில் தொடரும் அமைதியின்மை, அதானி குழுமத்திற்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் புபேன் குமார் போரா மற்றும் முன்னாள் மாநிலங்களவை எம்பிரிபுன் போரா ஆகியோர் தரையில் விழுந்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே போராட்டதில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பிரிவை சேர்ந்த உறுப்பினர் மிருதுல் இஸ்லாமுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கண்ணீர் புகை குண்டு வீசப்படவில்லை என்றும் 3 குண்டுகளை சாலையில் உருட்டி விட்டதாகவும் அதில் இருந்து புகை வெளியேறியதால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் உண்மை காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* உபியிலும் போலீஸ் தாக்கி தொண்டர் பலி
உபி மாநிலம் லக்னோவில் சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் அஜய்ராய் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் கோரக்பூரை சேர்ந்த பிரபத் பாண்டே(28) பலியானார்.

The post அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீச்சில் காங்கிரஸ் தொண்டர் பலி: அசாமில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Adani ,Assam ,Guwahati ,Congress party ,Guwahati, Assam ,Manipur ,Adani Group ,Dinakaran ,
× RELATED அம்பேத்கரை பாஜகவுக்கு பிடிக்கவில்லை: செல்வப்பெருந்தகை