×

அதிமுக மாவட்ட செயலாளர் தேடப்படும் நபராக அறிவிப்பு..!!

சென்னை: நில மோசடி விவகாரத்தில் காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். தக்கலூர் திருலோகசாமி கோயில் தேவஸ்தான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஓமலிங்கம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு ஏக்கரை போலி ஆவணம் மூலம் வாங்கியதாக முன்னாள் எம்எல்ஏ ஓம்லிங்கம் மீது திருநள்ளாறு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஓமலிங்கம் போலி ஆவணம் மூலம் கோயில் இடத்தை வாங்கியது உறுதி செய்யப்பட்டது. போலி ஆவணம் மூலம் பட்டா தயாரித்து விற்றதாக காரைக்காலை சேர்ந்த சிவக்குமார், நித்தியானந்தம் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

The post அதிமுக மாவட்ட செயலாளர் தேடப்படும் நபராக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK District ,Chennai ,Karaikal ,AIADMK ,Omalingam ,Thirulokaswamy ,Thakkalur ,
× RELATED புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு...