×

பொன்னமராவதியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம்

பொன்னமராவதி,டிச.7: பொன்னமராவதியில் கிராம நிர்வாக அலுவலர் சங்கக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் எதிர்வரும் 14.12.2024ம் தேதி நடைபெறுவதையொட்டி மாநில தேர்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமைவகித்தார். மாவட்ட கவுரவத் தலைவர் பாண்டியன், முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விளக்கக் கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் பூமிநாதன், வட்டத் தலைவர் ஹேமலதா, வட்டச் செயலாளர் பச்சையப்பன், வட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்து விளக்கப்பட்டது.

The post பொன்னமராவதியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Village ,Administrative Officers ,Association ,Ponnamaravati ,Village Administrative Officers' Association ,Tamil Nadu Village Administrative Officers Association ,Pudukottai District ,President ,Ponnamaravathi Village Administrative Officers Association ,Dinakaran ,
× RELATED வடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தல்