×

முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

அரியலூர், டிச.7: அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 10ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 15.8.2024 அன்று சுதந்திரதினவிழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச்செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்மசி மற்றும் டி.பார்மசி சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க
www.mudhalvar marundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 5.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன்கருதி 10-12-2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur district ,Tamil Nadu ,Chief Minister ,Independence Day ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...