- பாகமுதியன்பேட்டை
- புதுச்சேரி
- புதுச்சேரி லாஸ்பெட்
- புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி
- லாஸ்பேட்டை மெயின் ரோடு
- பாக்கமுடையான்பேட்டை
புதுச்சேரி, டிச. 7: புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே நடுரோட்டில் ராட்சத மரம் விழுந்ததில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. புதுச்சேரி பாக்கமுடையான்பேட் லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் அரசு தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு எதிரே இருந்த ராட்சத மரம் நேற்று மதியம் திடீரென நடுரோட்டில் வேரோடு சாய்ந்தது. அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் பைக்கின் மீது விழுந்ததில், அதை ஓட்டிவந்த நபர், சுதாரித்துக்கொண்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் மோட்டார் பைக், மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. பள்ளிக்கு அருகே இருந்த மின்கம்பிகளும் அறுந்து, மரத்தில் சிக்கிய பைக் மீது உரசியதில் பைக் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகே இருந்த பொதுமக்கள், காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கோரிமேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டு இருந்த வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன்காரணமாக லாஸ்பேட்டை மெயின் ேராட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மரம் விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் கார் கடுமையாக ேசதமடைந்தது. தீயைணப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாக்கமுடையான்பேட்டில் ஓட்டிச் சென்றபோது நடுரோட்டில் ராட்சத மரம் விழுந்து தீப்பிடித்து எரிந்த பைக் appeared first on Dinakaran.