- பொதுச்செயலர்
- தவெகா
- தூத்துக்குடி
- புதுக்கோட்டை ஆறுமுகம்
- காந்திமதிநாதன்
- பொன்வேல்
- ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா
தூத்துக்குடி, டிச. 7: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆறுமுகம் நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் ஏற்பாட்டில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள புளியங்குளத்தை சேர்ந்த வாழை திரைப்படத்தில் நடித்த பொன்வேல் உள்ளிட்ட கிராம மக்களை தவெகவில் இணைந்தனர். இதையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுக்கோட்டை காந்திமதிநாதனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் பாலா, நெல்லை மாவட்ட பொறுப்பாளர் சஜி, வீரபாண்டி மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தவெக பொதுச்செயலாளரிடம் சமூக செயற்பாட்டாளர் வாழ்த்து appeared first on Dinakaran.