- கிறிஸ்துமஸ்
- நாசரேத்
- பள்ளி
- புனித ஜான்
- பெண்கள் உயர்நிலைப்பள்ளி
- துறவி
- ஜான்ஸ் கதீட்ரல்
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- கிறிஸ்து
- நாசரேத் பள்ளி
நாசரேத், டிச. 7:நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய சபை ஊழியர் ஜெசு ஆரம்ப ஜெபம் செய்தார். ஆசிரியர்கள், மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் இடம்பெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜசேகர், முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி, தூய யோவான் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வயோலா மார்கரெட், தலைமை ஆசிரியை கமலியா கெத்சி மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post நாசரேத் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை appeared first on Dinakaran.