×

பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்குள்ளான மாநில நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் உட்கோட்டத்தில் பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்கு உள்ளான மாநில நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெஞ்சல் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. பெஞ்சல் புயல் கரையை கடந்தவுடன் பழுதடைந்த சாலைகள் உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை வாகனங்கள், கார், வேன், அரசு பேருந்து, லாரி போன்ற பெரும்பாலான கனரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் மாநில நெடுஞ்சாலையான திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் – செங்குன்றம் நெடுஞ்சாலை, திருநின்றவூர் – பெரியபாளையம் நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகளில் புதுக்குப்பம், பெரியகுப்பம், வெங்கல் மற்றும் வடமதுரை ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் பொழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்காக ஆளாகினர்.

இதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் டி.சிற்றரசு உத்தரவின் பேரில் திருவள்ளூர் உட்கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஸ்நாவிஸ் பெர்னான்டோ மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் பிரசாந்த், அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை சீரமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதில் கும்மிடிப்பூண்டி பஜார், பூவலம்பேடு, மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, மாநெல்லூர், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், அயநெல்லூர், ரெட்டம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை, குடியிருப்பு, கடைகள், அரசு அலுவலங்கள், துணை மின் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், கிராம சேவை கட்டிடம், மழை நீர் வடிகால் கால்வாய் மூலம் சென்றது. குறிப்பாக கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை பல ஏரிகள் நிரம்பி சாலையின் தேங்கியது. அந்த மழைநீரனது கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு சாலைகள் நீ தேங்காத வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கார், வேன், லாரி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ சிரமம் இல்லாமல் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்குள்ளான மாநில நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Benjal ,Tiruvallur ,Tiruvallur Utkottam ,Cyclone ,Thiruvallur district ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட 156 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்