×

திண்டுக்கல்லில் பன்றி திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல், டிச. 5: திண்டுக்கல் அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வீட்டில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த பன்றியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் எஸ்ஐ பாலசுப்ரமணியன், சிறப்பு எஸ்ஐ வனராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாலப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருண்குமார் (25), அனுமந்தநகர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த கிரி (23) ஆகியோர் பன்றியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திண்டுக்கல்லில் பன்றி திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Krishnamurthy ,Balakrishnapuram Govindaraj ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை