×

கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

கோவில்பட்டி, டிச.5: கோவில்பட்டி பசுமை இயக்கம் சார்பில் முத்தானந்தபுரம் ஓவியபயிற்சி பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருகபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி கலந்து கொண்டு மழை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். இதில் ஓவிய ஆசிரியை முத்துகோமதி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Muththanandapuram Painting ,Training ,School ,Kovilpatti Green Movement ,Bharatiyar ,
× RELATED கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்