×

டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை

சிவகங்கை, டிச. 5: இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை கிராமத்தில் கோயில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த இருளன் மற்றும் மாதவன் இருவரும் தாக்கப்பட்ட நிலையில் இது குறித்து இளையான்குடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நேற்று வேலடிமடை கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சிவகங்கை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : DSP ,Sivagangai ,Veladimadai ,Ilayayankudi ,Irulan ,Madhavan ,Ilayankudi ,Dinakaran ,
× RELATED தேவகோட்டையில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டிஎஸ்பி நடவடிக்கை