- ராமநாதபுரம்
- அண்ணா பல்கலைக்கழக மண்டலங்கள்
- திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி
- ராமநாதபுரம் மதுமிதா
- அம்மாள் பொறியியல் கல்லூரி துறை
ராமநாதபுரம், டிச.5: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையே குண்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கட்டிடவியல் துறையைச் சேர்ந்த மதுமிதா தங்கப் பதக்கத்தையும், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த மாணவிக்கு கல்லூரி தாளாளர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.டிசம்பர் மாதம் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா பல்கலைக் கழகத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக மாணவி மதுமிதா கலந்துகொள்ள உள்ளார்.
The post போட்டிகளில் சாதனை கல்லூரி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.