×

அர்ஜூன் சம்பத்தின் மகனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

சென்னை: கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக அப்துல் ஜலீல் என்பவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி, தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீன்கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தினமும் காலை 10.30 மணிக்கு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென்று நிபந்தனை விதித்து ஓம்கார் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post அர்ஜூன் சம்பத்தின் மகனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Arjun Sampad ,CHENNAI ,Abdul Jalil ,Hindu People's Party ,Arjun Sampath ,Omkar Balaji ,Coimbatore ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!