×

பழநி கோயிலில் நீதிபதி குழு ஆய்வு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் முருகன் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த சிலையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருத்தாச்சல அடிகளார், சரவணம்பட்டி ஆதீனம் குமரகுருப சுவாமிகள், பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் நடராஜன், பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஐஐடி பேராசிரியர் முருகையா அடங்கிய குழுவினர் நேற்று பழநி கோயில் மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் காரணமாக மலைக்கோயிலில் 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் பொங்கியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இதுதொடர்பாக அறிக்கை தயாரித்து அரசிற்கு வழங்கப்படும்’’ என்றார்.

The post பழநி கோயிலில் நீதிபதி குழு ஆய்வு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Palani ,Moolavar Murugan ,Dandayuthapani Swamy Hill Temple ,Palani, ,Dindigul district ,Siddhar Bogar ,Navabashanam ,Dinakaran ,
× RELATED தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி...