×

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

மதுரை, டிச. 4: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு கொண்டாட்டம் நடந்தது. நூலகத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் நடந்த இந்நிகழ்ச்சியில் தேசிய சதுரங்க பயிற்சி நடுவரும், ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருமான பாண்டியராஜன் கலந்துரையாடினார்.

ஆர்வலர்கள் ஸ்ரீகாந்த், வீரேஸ்வர், திலகவதி சொற்பொழிவு நிகழ்த்தினர். சுரேஷ், தமிழ்வளவன் பாட்டு பாடினர். அபிஷேக் பாரதி கதை சொல்லுதல் நிகழ்ச்சிகளை நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் பலரும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கலைஞர் நூலகம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Day of Persons with Disabilities ,Artist Centenary Library ,Madurai ,World Day of Persons with Disabilities ,Madurai Artist Centenary Library ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் தினவிழா