×

தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்

நாகப்பட்டினம்,டிச.3: தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி திருச்சி காரைக்கால் பயணிகள் ரயில் திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் திருவாருர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரன் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு மனு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதே போல் நாகூர்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்கமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் அடிப்படையில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ரதிப்ரியா ஆகியோர் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை தொடங்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் (1ம் தேதி) முதல் இரண்டு ரயில்களையும் வழக்கம் போல் நாகப்பட்டினம், வெளிப்பாளையம், நாகூர் வழியாக இயக்கப்பட்டது.

The post தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Nagapattinam ,Tiruvarur ,Lord Dargah ,Nagor ,Dinakaran ,
× RELATED போலி பாஸ்போர்ட் புழலை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது