×

போலி பாஸ்போர்ட் புழலை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது

திருச்சி: நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது ரபு (57). இவர், மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் திருச்சி திரும்பினார். விமான நிலையத்தில் இமிகிரேசன் அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, தந்தை பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் ஆகியவற்றை மாற்றி போலி பாஸ்ேபார்ட் பெற்றது தெரியவந்தது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியை சேர்ந்த தனசேகர்(51), தஞ்சாவூர் திருமங்கலகுடியை சேர்ந்த முனியாண்டி(59) ஆகியோர் சிங்கப்பூர் செல்வதற்காக போலி பாஸ்போர்ட்டுடன் திருச்சி விமான நிலையம் வந்தபோது சிக்கினர். இதையடுத்து மூவரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.

The post போலி பாஸ்போர்ட் புழலை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhala ,Trichy ,Mohammed Rabu ,Nagapattinam ,Malaysia ,
× RELATED கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில்...