- மாற்று
- அஇஅதிமுக
- கடம்பூர் ராஜூ சட்டமன்ற
- கயத்தூர்
- சிதம்பரபுரம்
- Kadampur
- கோவில்பட்டி
- பாசரா
- கவிராசன்
- தின மலர்
கயத்தாறு, டிச. 4:கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். கோவில்பட்டி அருகே கடம்பூரை அடுத்த சிதம்பராபுரத்தில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ இல்லத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் தலைமையில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் ஓபிஎஸ் அணி இளைஞரணி வடக்கு மாவட்ட செயலாளர் தர்ஷன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் நீலகண்டன், கடம்பூர் ஜெ. பேரவை நகர செயலாளர் மோகன், விஜி, மாரித்துரை, முருகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.